நாடு முழுவதும் ஊரடங்கு என பரவும் செய்தி பொய்யானது - காவல்துறை பேச்சாளர்

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 17 திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை ஊரடங்கு தொடர்பான தவறான தகவல்கள் காரணமாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் இவ்வாறு தவறான தகவல்களை பரப்பிய நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.