நாட்டை உடன் முடக்குங்கள் - அரசாங்கத்திடம் வேண்டுகோள்…!

நாட்டின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையைக் கருத்திற் கொண்டு முழு நாட்டையும் முடக்குவது குறித்து அவசரமாக அவதானம் செலுத்த வேண்டும் என, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்சம் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பிலேனும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை சாதகமான ஒன்று அல்ல எனவும், உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர், உரிய சிகிச்சை நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் வரை வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குறித்த நபர்கள் சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவ்வாறானவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கான வசதிகள் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போது கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பொது சுகாதர பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதாரத் தரப்பினர் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றின் மூன்றாம் அலைக்கு மத்தியில் சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாக்கப்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.