உடன் அமுலாகும் வகையில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்; 28 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு.

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (21) காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் 3 மாவட்டங்களை சேர்ந்த 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பான முழுமையான விபரம்:
இதேவேளை 8 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே காவல்துறை அதிகாரப்பிரிவுக்குபட்ட மகுல் பொகுன கிராம சேவகர் பிரிவும் வத்தளை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்தை தெற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் மீகஹாதன்ன காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட வலல்லாவிட்ட தெற்கு, மாகலந்துவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தின் புளத்கோபிட்டிய காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட உடபொத்த மற்றும் கென்தாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட மத்திய கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவும் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நவமெதகம கிராம சேவகர் பிரிவின் நவமெதகம பகுதியும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவளை கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட கெஸ்பேவ தெற்கு, மாகன்தன கிழக்கு, தம்பே, பட்டகெத்தர வடக்கு, மடபாத்த, ஹல்பிட்ட, கெஸ்பேவ கிழக்கு, மாகன்தன மேற்கு, நிவுன்கம, பொல்ஹேன, ஹென்னந்தர தெற்கு மற்றும் வடக்கு, தல்தர கிழக்கு மற்றும் மேற்கு நிவந்திடிய, மாம்பே மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் மகரகமை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட அரவல்ல மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.