நாட்டில் உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 2000 ஐக் கடந்தது.

இலங்கையில் இன்று இதுவரையில் 2,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய இலங்கையில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் இன்றைய தினத்தில் பதிவாகியுள்ளது. 

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 125,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,365 பேர் இன்று (09) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 104,463 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 786 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.