பிறை தென்படவில்லை; நாளை மறுதினம்(14) நோன்புப் பெருநாள்.

நாட்டில் எந்தவொரு பகுதியிலும் ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்படாமையினால், புனித ரமழான் மாதத்தை 30ஆக பூரணப்படுத்தி செய்து நாளை மறுதினம் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் (ஈதுல் பித்ர்) கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இன்று(12) மாலை கூடிய பிறை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

இக்கூட்டத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு, பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அதன் பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள அதிகாரிகள், இலங்கை வலிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி பள்ளிவால் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.