தொடர்ந்தும் தீவிரமடையும் கொரோனா தொற்று…!

இன்றைய தினத்தில் (29) மாத்திரம் 1,491 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன்படி, நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் 106,444 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 362 பேர் இன்று (29) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 95,445 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.