தொலைபேசியில் அச்சுறுத்திய ஜனாதிபதி; பரபரப்பு தகவலை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

போர்ட் சிட்டி திட்டத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட காரணத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை தொலைபேசியில் அழைத்து தன்னை எச்சரித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இன்று முற்பகல் விசேட ஊடக சந்திப்பை நடத்தி அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

போர்ட் சிட்டி திட்டத்தின் ஊடாக அமைக்கப்படும் ஆணைக்குழுவினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதுபோல சீனக் கொலணியாகவே இலங்கை மாற்றமடையும் என தாம் தெரிவித்தமைக்காக ஆத்திரங்கொண்ட ஜனாதிபதி, நாட்டின் தலைவராக இல்லாமல் தன்னை கெட்டவார்த்தையினால் விமர்சித்ததாகவும் விஜேதாஸ ராஜபக்ஷ கூறினார்.

இதனையடுத்து பொலிஸ்மா அதிபரிடம் தாம் தனது உயிர் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக முறையிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.