இலங்கையின் அறிவிப்பால் தமிழகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!!

இலங்கையில் பதினொரு இஸ்லாமிய குழுக்கள் மீது தடை அறிவிக்கப்பட்டமையை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையைச் சேர்ந்த அடிப்படைவாதிகள் இந்திய மண்ணிலிருந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை வழிநடத்த படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான எச்சரிக்கையை அடுத்து தமிழக காவல்துறையினர் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெ இந்து செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சமீபத்தில் ஒப்புதல் வழங்கினார். 

அதில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாஅத், இலங்கை தௌஹீத் ஜமாஅத், அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா, தாருல் ஆதார் & ஜமியுல் ஆதர், இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்), அல்கொய்தா, சேவ் த பேர்ள்ஸ், சூப்பர் முஸ்லீம் என்பனவும் தடைசெய்ய பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.