அமைச்சர் பந்துலவின் மற்றுமொரு நிவாரணப் பொதி! - நாளை முதல்!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய ´சதொச நிவாரண பொதி - 2´ மே மாதம் முதல் 1000 ரூபாய் விலைக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கடந்த நிவாரண பொதியை விட இம்முறை நிவாரண பொதியில் ஒரு கிலோ சம்பா மற்றும் ஒரு கிலோ நாட்டரிசி மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சதொச நிவாரண பொதி - 2 யில் உள்ளடங்கியுள்ள பொருட்கள்

ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி
ஒரு கிலோ கிராம் நாட்டரிசி
ஒரு கிலோ கிராம் மாவு
ஒரு கிலோ கிராம் அவுஸ்திரேலியா சிகப்பு பருப்பு
ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனி
200 கிராம் நெத்தலி ( தாய்)
50 மில்லிலீற்றர் திரவ கிருமிநாசினி போத்தல்
முகக்கவசம் ஒன்று
100 கிராம் தேயிலை தூள்
50 கிராம் சோயா மீட் பெக்கெட் ஒன்று
100 கிராம் துண்டு மிளகாய்

அதன்படி, மே மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் இலங்கை பூராகவும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் இந்த நிவாரணப் பொதியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நிவாரணப் பொதியை பெற்றுக் கொள்ளும் நபர்களுக்கு 5 ரூபாய் விலைக்கழிவில் 400 கிராம் பால்மா பெக்கெட் ஒன்றினையும் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.