சகல பள்ளிவாசல்களுக்கும் வக்பு சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை செய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் பள்ளிவாசல்களில் நிர்வாக சபைகளில் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பார்கள் எனில், அவர்களை அந்த பதவிகளில் இருந்து விலகுமாறு வக்ப் சபை அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற வக்ப் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

தேசிய தவ்ஹித் ஜமாத், சிலோன் தவ்ஹித் ஜமாத், அகில இலங்கை தவ்ஹித் ஜமாத் உட்பட 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு அரசாங்கம் தடைவிதித்து, விசேட வர்த்தமானி அறிவித்தலை அண்மையில் வெளியிட்டிருந்தது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.