பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அவசர தேவைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு மாத்திரம் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெறும் அழைப்புக்களில் நூற்றுக்கு 93 வீதமானவை அவசர தேவைகளின் அடிப்படையில் காணப்படுவதில்லையென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனால் அவசர தேவைகளுக்கான அழைப்பை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் மக்களுக்கு இழக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெறும் அழைப்புக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் 119 எனும் இலக்கத்திற்கு 12 இலட்சத்து 32 ஆயிரத்து 272 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி பொய்யான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி, பொய்யான தகவல்களை வழங்கிய இரண்டு பெண்கள் அண்மையில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.