நாடு முடக்கப்படுமா? சற்றுமுன் இராணுவத் தளபதி வெளியிட்ட அறிவிப்பு.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்சமயம் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொதுமக்கள் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பார்களாயின் முடக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் அனைத்து மக்களும் பொது இடங்களுக்கும் பொது நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமையே, தற்போதைய கொரோனா நிலைமைக்கு காரணம் என இராணுவத் தளபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அயல்நாடான இந்தியாவில் 3 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாளொன்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2000ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள்.

உலக நாடுகளிலும் கொவிட் 19 வேகமாகப் பரவி வருகிறது. புத்தாண்டு வரை நாளாந்தம் 150-200 பேர் வரை நாளாந்தம் அடையாளங் காணப்பட்டிருந்தனர். மக்களின் ஒத்துழைப்பினால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.

புத்தாண்டு நிறைவடைந்ததவுடன் 300 வரை அதிகரித்தது. நேற்று 600 பேர் வரை தொற்றுக்குள்ளாகியிருந்தார்கள்.

குளியாபிட்டிய, கணேவத்த, வத்தளை ஆகிய பகுதிகளில் அதிகமானோர் அடையாளங் காணப்பட்டுள்ளார்கள்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.