இலங்கையில் அடுத்தவாரத்தில் இருந்து எல்லையற்ற இணைய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்காக, அனைத்து இணைய இயக்குநர்களும் கடந்த முதலாம் திகதி ஒன்றுகூடி இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தொகுப்புகளை மதிப்பிடும் பணிகள் தற்போது இடம்பெறுவதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்சமயம் பரீட்சார்த்த செயற்பாடுகள் இடம்பெற்று வருவதகவும் அந்த சபை குறிப்பிடுகின்றது.
எல்லையற்ற இணைய வசதிகளை வழங்குவது குறித்த தத்தமது திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கியிருப்பதாகவும் அவற்றை தற்போது பரிசீலனை செய்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எந்த வகையிலான பக்கேஜ் (பொதிகள்) அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
Post a Comment