திங்கள் முதல் சீனி உள்ளிட்ட சில பொருட்களின் விலைகளில் மாற்றம் - வர்த்தக அமைச்சர் விடுத்துள்ள மகிழ்ச்சிகர அறிவிப்பு

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் பல பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி நாட்டின் அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம் புதிய விலைகளின் கீழ் குறித்த பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

குறித்த அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, சந்தையில் தற்போது 150 முதல் 165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சிகப்பு சீனி ஒரு கிலோவினை 115 ரூபாவுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் வணிக கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற 100 கிராம் தேயிலை தூளின் விலை 135 ஆக காணப்படும் நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் 100 கிராம் தேயிலைத் தூள் 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

தற்போது 550 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லி லீற்றர் சோயா எண்ணெயை 310 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

50 மில்லி லீற்றர் கை கழுவும் திரவம் 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதுடன் SLS சான்றிதழ் கொண்ட முகக்கவசத்தின் புதிய விலை ரூ .14 ஆகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.