நாடு முழுவதும் விசேட சோதனை - பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

புத்தாண்டு நிறைவடையும் வரையில், வீதிகளில் பயணிக்கும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சாரதிகள், கவனயீனமற்ற முறையிலும், அதிக வேகத்துடனும், மதுபோதையிலும் வாகனங்களை செலுத்துகின்றமை தொடர்பில் கண்காணிக்கப்படுகிறது.

மதுபோதையில் அல்லது போதைப்பொருளை பயன்படுத்தியவாறு, வாகனத்தை செலுத்திய நிலையில் கைதுசெய்யப்படும் சாரதிக்கு, காவல்துறை பிணை வழங்கப்பட மாட்டாது.

அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதுடன், குறித்த வாகனமும் காவல்துறையினால் பொறுப்பேற்கப்படும் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபோதையில் இருந்த நபருக்கு, வாகனத்தை செலுத்த வழங்கியமை தொடர்பில், குறித்த வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என்றும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுமாறு, பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.