இந்த ஆண்டுக்கான உம்ரா யாத்திரைக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -
இதற்கமைய, இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் உம்ரா யாத்திரைக்கு 14 நாட்கள் முன்னதாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோருக்கு உம்ரா யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கும் உம்ரா யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புனித ரமழான் மாதத்தில் இருந்து இதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக, சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கொரோனா தொற்று குறித்த சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் யாத்திரைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என சவூதி அரேபியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த நடைமுறை ஹஜ் யாத்திரை வரை நீடிக்கப்படுமா என்பது குறித்து தெளிவின்மை காணப்படுவதாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment