இலங்கையில் வாட்ஸ் ஆப்பில் பரவும் ஆபத்து – கடும் எச்சரிக்கை விடுக்கும் கணிணி அவசர பிரிவு

வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இணையத்தள இணைப்பொன்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணிணி அவசர பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கார்கில்ஸ் புஃட் சிட்டி தனது 40வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது என்ற விதத்திலேயே இந்த இணையத்தள இணைப்பொன்று பகிரப்பட்டு வருகின்றது.

எனினும், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த இணையத்தள இணைப்பானது போலியானது என கார்கில்ஸ் புஃட் சிட்டி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை, நெஸ்லே மற்றும் கீல்ஸ் நிறுவனத்தின் பெயரிலும் இவ்வாறான தகவல் இணைய இணைப்பொன்று பகிரப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, இவ்வாறான இணைப்புக்களை கிளிக் செய்வதன் ஊடாக, பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என கணிணி அவசர பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரட்ணம் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு நிறுவனங்களை மேற்கோள்காட்டி, ஏதேனும் தகவல்கள் பகிரப்படும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை பார்வையிட்டு, அதனை உறுதி செய்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான இணைப்பை கிளிக் செய்வதன் ஊடாக, உங்களின் தரவுகளை, திருடுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, இவ்வாறான இணைப்புக்களை கிளிக் செய்வதன் ஊடாக, உங்களின் தரவுகளை வெளிநபரினால் அழிப்பதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

மேலும், இவ்வாறான இணைப்புக்களை கிளிக் செய்வதன் ஊடாக, உங்களின் கணிணி மற்றும் தொலைபேசிகளுக்கு வைரஸ்களை அனுப்புவதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.