அரசாங்கத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற தேங்காய் எண்ணையை, எந்தவித அச்சமும் இன்றி சதோச நிறுவனங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எந்தவொரு நச்சுத்தன்மையும் அற்ற தேங்காய் எண்ணெய், எந்தவித பற்றாக்குறையும் இன்றி, சதோச நிறுவனங்களில் விற்பனைக்காக இருக்கின்றது. அரசாங்கத்தினால் தயாரிக்கப்படுகின்ற தேங்காய் எண்ணெய் சதோச நிறுவனங்கள் விற்பனைக்காக இருக்கின்றன. புத்தாண்டு காலத்தில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என எந்தவித அச்சமும் கொள்ளத்தேவையில்லை. எந்தவித நச்சுத்தன்மையும் அற்ற அரசாங்கத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற தேங்காய் எண்ணெய் சதோச நிறுவனங்களில் இருக்கின்றது.
Post a Comment