கொரோனா அச்சம்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

முகக் கவசம் அணியும் நடைமுறை கடுமையாக பின்பற்றப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்கள தமிழ் புதுவருட காலத்தில் சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாததன் காரணமாகவே தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த வருடம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, முகக் கவசம் அணியும் விதிமுறையை முழுமையாக பின்பற்ற தீர்மானித்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொதுப் போக்குவரத்து, மக்கள் ஒன்று கூடும் இடங்கள், வர்த்தக நிலையங்கள், பணிபுரியும் இடம் ஆகியவற்றில் முகக் கவசங்களை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.