அதிவேக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த காரின் சாரதி கைது

தெற்கு அதிவேக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் நான்கு இளைஞர்கள், காரில் பயணித்த சம்பவம் தொடர்பில், அந்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சாரதி இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

கண்டி – அக்குரணை பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியமை, வீதியில் பயணித்த ஏனையோருக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட போக்குவரத்து சட்டங்களின் கீழ் பாணந்துரை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.