நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதன்படி, வெல்வாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபைப் பகுதி மற்றும் கொட்டம்கஹபொக்க கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், புத்தள – ரஹதன்கம கிராம சேவகர் பிரிவு மற்றும் உஹன – குமாரிகம கிராம சேவகர் பிரிவு என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மாத்தளை – அலுகொல்ல கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில், கொரோனா தொற்றுன் தாக்கம் அதிகரித்துள்ள பின்னணியிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.