புதிய கொவிட் தொற்றுக்கு மத்தியில் ஏன் நாட்டை முடக்கவில்லை? – சற்றுமுன் ஜனாதிபதி வெளியிட்ட விசேட அறிக்கை

தடுப்பூசிகளை செலுத்துவதே, கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான ஒரே தீர்வாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான உரிய திட்டம், அரசாங்கம் வசம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

சுகாதார பிரிவினரால் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இலங்கைக்கு முதல் தடவையாக கொண்டு வரப்பட்ட எஸ்ட்ராசேனாகா தடுப்பூசி, 925,242 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட நடவடிக்கை மே மாத ஆரம்ப வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசி 200,000தை ஏப்ரல் மாத இறுதியிலும், 400,000 தடுப்பூசிகளை மே மாதத்திலும், 800,000 தடுப்பூசிகளை ஜுன் மாதத்திலும், 1,200,000 தடுப்பூசிகளை ஜுலை மாதத்திலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய வகையில் முகக் கவசத்தை அணிதல், கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுத்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்ளுதல், நிகழ்வுகள் போன்ற மக்கள் ஒன்று கூடும் நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டை முடக்குவதே, கொவி;ட் தொற்றுக்கான தீர்வு என சில தரப்பினர் நினைத்துக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

ஆரம்ப காலக் கட்டத்தில் அவ்வாறான நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கும் பெறுபேறுகளை வழங்கியிருந்தாலும், நீண்ட காலத்திற்கு அது பொருத்தமற்றது என அவர் கூறுகின்றார்.

மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு அது, எதிரான தாக்கத்தையே செலுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டை, முழுமையாக முடக்க முடியாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரசாங்கம் என்ற வகையில், தாம் தமது கடமைகளை உரிய வகையில் நிறைவேற்றுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று, மக்கள் என்ற வகையில், தமது பொறுப்பு மற்றும் கடமைகளை சுயமாக நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது என்று இலங்கையில் கூறப்பட்ட கூற்றுக்கள் பொய்யானவை என்று வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.

இதை அவர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு பதிவில் குறிப்பிடுகிறார். அவர் தெரிவித்துள்ளதாவது,

“ஒரு புதிய கோவிட் வைரஸ் நாட்டில் பரவிய கதை பொய்!

ஒரு புதிய காற்று வழி கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்ற அனைத்து அறிக்கைகளும் பொய்யானவை. கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறதா என்பது குறித்த சர்ச்சை வைரஸின் ஆரம்ப நாட்களிலிருந்து பல ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, இன்னும் அதில் உறுதியான முடிவு எட்டப்படவில்லை.

இந்த வைரஸ் காற்றில் பரவக்கூடும் என்று கடந்த அக்டோபரிலிருந்து உலகம் முழுவதும் சில பேச்சுக்கள் வந்துள்ளன.

இது திடீரென்று நேற்று இலங்கையில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் முதல் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனை குற்றத்தை மறைக்க தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்காக இது பயன்படுத்தப்படலாம்.

முறையான ஆய்வு இல்லாமல், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு இடையூறு விளைவித்த அதிகாரிகளின் தவறுகளை மூடிமறைக்கும் பொருட்டு, ஒரு புதிய திரிபு நாட்டிற்குள் நுழைந்துள்ளது என்றும் அது காற்று வழி என்று பிரச்சாரம் செய்ய பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.