இலங்கைக்கு தேவையான ஒக்சிஜன் நாட்டில் உள்ளதா? சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்

சித்திரை புத்தாண்டுக்கு பின்னரான காலத்தில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களுக்கு, சுவாச கோளாறு அதிகளவில் ஏற்பட்டுள்ளமையினால், அவர்களுக்கான ஒக்சிஜன் அதிகளவில் தேவைப்படுகின்றது.

ஒக்சிஜனுக்கான பற்றாக்குறையை இந்தியா எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், இலங்கையில் அவ்வாறான நிலைமை ஏற்படுமாக இருந்தால், அதனை சமாளிப்பதற்கு இலங்கைக்கு தற்போது இயலுமை உள்ளதா என்ற கேள்வி பலரது மனங்களிலும் எழுந்துள்ளது.

இலங்கை சுகாதார பிரிவிற்கு தேவையான ஒக்சிஜனை, இரண்டு நிறுவனங்களின் ஊடாக தாம் பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் விநியோக பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் கபில விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சுகாதார பிரிவிற்கு ஒக்சிஜனின் தேவை தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

நாட்டிற்கு ஒக்சிஜனின் தேவை காணப்படுமாக இருந்தால், அதனை எதிர்கொள்ள தாம் தயார் என அவர் குறிப்பிடுகின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.