நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் கோர விபத்து: மூன்று பெண்கள் உயிரிழப்பு

நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியின் ஹக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியாவில் இருந்து எல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியின் மீது முன்னால் பயணித்த கனரக வாகனம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தொிவித்துள்ளனர்.

குறித்த கனரக வாகனம் ஒன்றின் தடுப்புத் தொகுதி செயற்படாமல் போனதால், இவ்வாறு முச்சக்கரவண்டியின் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் முச்சகரவண்டியில் பயணித்த பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி காயமடைந்த நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.