8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.

தெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனிகம மற்றும் தொடங்கொட நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று நண்பகல் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

குறித்த வாகன விபத்தினால் அதிவேக வீதியூடான மாத்தறை பகுதிக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது அது வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், அதிவேக வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் உரிய இடைவெளி மற்றும் வேகத்தினை பேணி பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.