72 மணித்தியாலங்களில் 40 பேர் மரணம்; பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்.

கடந்த 72 மணி நேரத்தில் வாகன விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜீத் ரோஹண தெரிவித்தார்.

கடந்த 14 ஆம் திகதி வாகன விபத்துக்களால் 14 இறப்புகளும், 15 ஆம் திகதி 16 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

கவனயீனத்துடன் வாகனம் செலுத்தியதால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.