5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான புதிய அறிவித்தல்

ரூ .5 ஆயிரம் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (19) முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார்.

எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

“தற்போது, ​​இலங்கையில் 1,073 சமுர்தி வங்கிகளில் ரூ .5 ஆயிரம் என்ற சமூக பாதுகாப்பு நல உதவித்தொகையை அரசாங்கம் வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில் 23 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமைக்கு அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளோம்.

இதற்கு தேவையான நிதியை சமுர்தி வங்கிகளுக்கு அனுப்பியுள்ளோம். இல்லையென்றால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை எங்களிடம் சமர்ப்பித்து தேவையான நிதிகளை அந்தந்த பகுதிகளுக்கு பெற்றுக் கொள்ளுமாறு நாம் கோரியுள்ளோம்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.