கண்டி மாவட்டத்தில் கொரோனா ஜனாசாக்களை அடக்கம் செய்ய 5 இடங்கள் தெரிவு.

கண்டி மாவட்டத்தில் மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் நிஹால் வீரசூரியவிடம் யட்டிநுவர பிரதேச சபையின் உறுப்பினரும் பிரபல்ய சமூக செயற்பாட்டாளருமான வசீர்  முக்தார் விடுத்த கோரிக்கைக்கு இணங்க கொரோனா ஜனாசாக்களை அடக்கம் செய்ய மத்திய மாகாண பிரதான செயலாளர் ராஜரட்ன தலைமையில் மத்திய மாகாணத்தில் பொருத்தமான மையவாடியினைத் தெரிவு செய்வதற்காக ஒரு பிரத்தியேகமான ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது.

கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் வழிகாட்டலுடன் கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழக் கூடிய ஜும்ஆப் பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி 05 இடங்களை தெரிவு செய்து மாகாணப் பணிப்பாளரிடம் வசீர் முக்தார் பரிந்துரை செய்துள்ளார்.

அந்த வகையில் அக்குறணை தாய் பள்ளி ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடி, திகன கும்புக்கந்துர ஜம்ஆப் பள்ளிவாசல் மையவாடி, யட்டி நுவர தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள தெஹிஅங்கை ஜும்ஆப் பள்ளிவாசலின் மையவாடி, உடுநுவர கெட்டக்கும்புர ஹந்தஸ்ஸ ஜும்ஆப் பள்ளிவாசலின் மையவாடி, தெல்தோட்டை ரலிமங்கொட ஜும்ஆப் பள்ளிவாலின் மையவாடி முதலிய ஐந்து மையவாடிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

தற்போது மாகாண பிரதான செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள பிரத்தியோகமான குழுவினர் கடந்த வாரம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் இந்த ஐந்து இடங்களில் பரிசீலனை செய்து ஓர் இடத்தை அடையாளம் கண்டு மிக விரைவில் தருவார்கள் என்று யட்டிநுவர பிரதேச சபையின் உறுப்பினரும் பிரபல்ய சமூக செயற்பாட்டாளருமான வசீர் முக்தார் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.