கடந்த 24 மணித்தியாலங்களில் 11 பேர் பலி! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

வீதி விபத்துகளினால் இன்று காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்போச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வீதி விபத்துகள் காரணமாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது நேற்று இடம்பெற்ற விபத்தில் சிக்கிய ஆறு பேரும், இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளில் சிக்கி காயமடைந்திருந்த 5 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மாத்திரம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் ஏப்ரல் மாதத்திலேயே அதிகளவான வாகன விபத்துக்கள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் அதனை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகம் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.