நாட்டில் நேற்றும் 13 மரணங்கள் பதிவு; பொலிசார் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

மீண்டும் நாட்டில் விபத்துக்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று (08) மாத்திரம் விபத்துகளால் 13 மரணங்கள் நாட்டில் பதிவானதாக கூறிய அவர், அதில் 7 மரணங்கள் 24 மணித்தியாலங்களில் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஏனைய 6 மரணங்கள் அதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களால் காயமடைந்த நிலையில் நேற்று சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பேர் பாதசாரிகள் என்றும், 4 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும், சாரதிகள் இருவர் மற்றும் பயணி ஒருவர் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, விபத்துக்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.