உலகின் வர்த்தகத்தை முடக்கிய Ever Given சரக்கு கப்பல் ஒருவழியாக மீட்பு.

எகிப்து சுயஸ் கால்வாயில் சிக்குண்டிருந்த Ever Given எனும் கொள்கலன் கப்பல் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி பயணித்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட ஜப்பானிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான Ever Given கொள்கலன் கப்பல் சுயஸ் கால்வாயில் கடந்த 22 ஆம் திகதி சிக்குண்டது.

சுயஸ் கால்வாய் பகுதியில் ஏற்பட்ட காற்று காரணமாக கப்பல் சிக்குண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, 300 இற்கும் மேற்பட்ட கப்பல்கள், நிர்க்கதிக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுமார் 6 நாட்களின் பின்னர் குறித்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கப்பல் இன்று தமது பயணத்தினை ஆரம்பிக்குமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த படகினை மீட்கும் பணியில் 12 மீட்பு படகுகள் மற்றும் 8 மணல் அகற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.