நாட்டில் புர்கா அணிவதற்கு தடை – அமைச்சரவை பத்திரத்தில் சரத் வீரசேகர கையெழுத்து!

இலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் பெண்களின் புர்கா ஆடைகள் தொடர்பான தடை குறித்த அமைச்சரவை பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கையில் இயங்கிவருகின்ற மதரஸா பாடசாலைகளை தேசிய பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு தடை செய்யவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையொன்றை நிகழ்த்தி தெரிவித்திருந்தார்.


அந்த வகையில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் மீண்டும் இதனைக் குறிப்பிட்டிருப்பதோடு அமைச்சரவைப் பத்திரத்தை தயார் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.


இலங்கையின் பல பாகங்களிலும் சுமார் 1669 மதரஸா பாடசாலைகள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவை தவிர, அராபி பாடசாலைகள் என 317 பாடசாலைகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இந்த அனைத்துப் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளையும் தடை செய்து அவற்றை அரச பாடசாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்குக் கீழே கொண்டுவரவும் அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.