அஸாத் சாலி ஏன் கைது செய்யப்பட்டார்? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் வாகனத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் தயாரிக்கபட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டத்திற்கு முரணான கருத்துக்களை முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டு, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

சட்டமா அதிபரின் ஆலோசணைக்கமைய அவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டர்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பிலும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிபொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.