அடுத்தது வீதியில் சாரதியை தாக்கிய பொலிஸார்; கைது செய்யப்பட்டுள்ள மற்றுமொரு பொறுப்பதிகாரி!

கொழும்பு பன்னிப்பிட்டியவில், ​லொறி சாரதியை கீழே தள்ளிவிட்டு அவர் மீது ஏறி குதித்து பொலிஸ் போக்குவரத்து கான்டபிள், தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்ந்து குறித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பொலிஸ் போக்குவரத்து கான்டபிளை ஏப்ரல் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவிர வீரவில பகுதியில் நடந்ததாக பொலிஸ் நபரொருவரை தாக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது, இச் சம்பவம் நடந்த திகதி, நம்பகத்தன்மை, சம்பவம் குறித்து சுயாதீன தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் வெலிவேரிய காவல்நிலையத்தின் பலவின முறைப்பாட்டுப் பிாிவின் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தகரொருவரிடம் 10 ஆயிரம் ரூபா பணத்தை கையூட்டாக பெற்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை இலங்கை மக்கள் மத்தியில் பொலிசாரின் நன்மதிப்பை கேள்விக்குட்படுத்துவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.