ஆளும் தரப்புக்குள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் விமல்

பொதுஜன பெரமுனவுக்குள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படும் சிந்தனையில் சிலர் உள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல இஸ்லாம் அடிப்படைவாத அமைப்புகள் கலகொட அத்தே ஞானசார தேரரால் உருவாகியுள்ளது. அப்படியானால் ஐஎஸ் அமைப்பும் உருவாக பொது பல சேனவா காரணம்? என விமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிசாத் பதியுதீனின் சகோதரர் சஹ்ரானுடன் தொலைபேசியில் உரையாடிய சாட்சியை பொலிஸாரே வௌியிட்டனர். பேராயரிடம் காண்பித்தனர். விடுதலை செய்யும் போது வியாபாரம் தொடர்பில் கதைத்ததாக கூறுவதாக விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்லாம் அடிப்படைவாதிகளுடன் இணைந்து செயற்பட விரும்புவோர் ரிசாத் பதியுதீனின் உண்மையான சுயரூபத்தை மறைத்துள்ளதாக விமல் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏற்கனவே பொதுஜனபெரமுனவின் தலைமைப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய ஏற்கவேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்தால் ஆளும் தரப்புக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீளவும் மேற்கண்ட கருத்தை அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.