ராஜபக்சாக்களின் கோட்டையில் வெடித்தது போராட்டம்!

விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சுமார் 3 மணிநேரம் மாத்தரை கொழுப்பு பிரதான வீதி முடக்கப்பட்டத்துடன் அரசாங்கத்துக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

யானைகளை பராமரிப்பதற்காக விவசாயக் காணிகளை அரசாங்கம் கபளீகரம் செய்துள்ளதாக அறிந்த விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் கடந்த 53 தினங்களாக முன்னெடுத்த உணவு தவிர்ப்புப் போராட்டம் அமைச்சர் சமல் ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பூதாகாரமாக வெடித்தது.

அரசாங்கம் தங்களை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டி மீண்டும் விவசாயச்செய்கையில் பெண்கள் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நேற்றைய தினம் விவசாயிகள் அம்பலாந்தோட்டை நகரில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

ஆளுட் கட்சியின் தேர்தல் கோட்டையான அம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை போன்ற இடங்களில் இவர்களுக்காக நேரடியாக சென்று வாக்கு சேகரித்த பிக்குகளும் இணைந்து வீதியை மறித்து பாரிய போராட்டதை முன்னெடுத்தனர்.

யானைக்கும் மனிதனுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் அம்பாந்தோட்டை தொடக்கம் கொழும்பு வரை விவசாயிகள் பேரணியாக செல்வதாகவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.