இலங்கை தேசியக் கொடியை கால் துடைக்கும் கம்பளத்திலும், பாதணியிலும் அச்சிட்டதால் வெடித்து சர்ச்சை!

உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் சந்தையில் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து இந்த கால் துடைக்கும் கம்பளத்தை உலகம் முழுவதும் விநியோகித்து வருகிறது.

இந்நிலையில், இந்த கால் துடைக்கும் கம்பளம் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்பட்டால், எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் கால் துடைக்கும் கம்பளத்தை 12 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இதனை இலங்கைக்கு அனுப்பி வைக்க 9.20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றது. அமேசான் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 21 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன் அந்த நிறுவனத்தில் 12 லட்சத்து 98 ஆயிரம் பேர் தொழில் புரிந்து வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.