மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கோரிக்கை

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் சமந்த ஆனந்த இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும், பண்டிகை காலங்களில் மக்களின் அதிக நடமாட்டத்தால் நாட்டில் கொரோனா பரவும் ஆபத்து மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறினார்.

எனினும் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.