ஜனாதிபதி தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரை விசாரணைக்கு உட்படுத்திய சி.ஐ.டி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க கூறிய கருத்துக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றைய தினம் அவரிடம் இருந்து ஒரு வாக்குமூலத்தை பதிவுசெய்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் அசோக் அபேசிங்க இன்று காலை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான நிலையிலேயே அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை பதிவுசெய்த கடந்த திங்களன்றும் அதற்கு மறுநாளும் ஆஜராகுமாறு அசோக அபேசிங்கவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். எனினும் நாடாளுமன்ற அமர்வுகள் காரணமாக அவர் ஆஜராகவில்லை.

ஈஸ்டர் தாக்குதலுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்க்ஷ ஆகியோர் தொடர்புபட்டுள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் சில பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அளித்த முறைப்பாட்டுக்கு இணங்கவே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.