சற்றுமுன் ஜனாஸா விவகாரம் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள மற்றுமொரு அறிவிப்பு.

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வாராந்திர அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கொவிட் தொற்றுக்குள்ளாகி இறக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல இதனை கூறினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.