பாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட செய்தி....

பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் அப்பியாசப் புத்தகங்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில், பாடசாலை மாணவர்களுக்கு மிகச்சிறந்த பாதணிகளை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

300 ரூபா விலை குறைப்பு செய்து, பாதணிகளை சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதேநேரம், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் மூலம், அப்பியாசப் புத்தகங்களின் சந்தை விலையை குறைப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.