பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளிவந்த புதிய செய்தி

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சினால், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தரம் – 5, தரம் – 11, மற்றும் தரம் 13 ஆகிய வகுப்புக்களை முதற்கட்டமாகவும், ஏனைய வகுப்புக்களை கட்டம் கட்டமாக திறக்கவும் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கள் வழங்கிய அறிவுறுத்தல்களை கவனத்தில் கொண்டு இவ்வாறு அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கல்வியமைச்சரின் தலைமையில் தற்போது இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுகாதார மற்றும் கல்வித் துறை அதிகாரிகளின் இறுதிப் பரிந்துரையின் அடிப்படையில், பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பான திகதி அறிவிக்கப்படும் என கல்வியமைச்சின் செயலார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.