கொரோனா தொற்று குறித்த நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய நாளில் அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் நேற்று 94 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
மேலும், கொழும்பு மாவட்டத்தில், நேற்று 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் 26 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 20 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 17 பேரும், காலி மற்றும் பதுளை மாவட்டங்களில் 15 பேரும், நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 88 ஆயிரத்து 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 85 ஆயிரத்து 370 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 534 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 619 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் 104 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 10 ஆயிரத்து 752 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நேற்றைய நாளில் மாத்திரம் நாட்டில் 9 ஆயிரத்து 716 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Post a Comment