ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரிசி விலையில் மாற்றம்; விவசாய அமைச்சு அறிவிப்பு.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டு அரிசி ஒரு கிலோகிராமை 97 ரூபாவுக்கும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோகிராமை 95 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சிறப்பு அங்காடிகள், சதோச மற்றும் கூட்டுறவு வர்த்தக நிலையங்களில் இந்த விலையில் அரிசியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கும் குறித்த வர்த்தக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய 4 ஆயிரம் வர்த்தக நிலையங்களின் ஊடாக அரிசியை பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சு அறிவித்துளளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.