எதிர்வரும் சிங்கள் தமிழ் புத்தாண்டின்போது, பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்குமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்குமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன், அனைத்து எண்ணெய் வகைகளும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாது போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எழுத்துமூலமாக அறிவித்துள்ள போதும் இதுவரையின் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உளுந்து இறக்குமதி தடை காரணமாக நாட்டில் பல்வேறு சைவ உணவு விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment