வாகனங்களின் விலை குறைக்கப்படுகிறது; வெளியான தகவல்!

வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் விரைவில் நீக்கப்படும் என்று தான் நம்புவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்னகே தகவல் வெளியிட்டுள்ளார்.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் மத்திய வங்கி ஆகியன வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கான ஒழுங்கு முறை குறித்து கலந்தாலோசித்து வருவதாக மெரின்னகே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி செயலாளரின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பேச்சுவார்த்தையானது மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும், அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் சாதகமான தீர்வு எட்டப்படலாமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில் தற்போது நியாயமற்ற முறையில் உயர்த்தப்பட்டுள்ள வாகனங்களின் விலை ஓரளவு குறையும் என்றும் மெரின்னகே மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.