சற்றுமுன் வெளியான விசேட செய்தி - கொரோனா ஜனாஸாக்களை இலங்கைக்கு அண்மித்த தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சரவை இதனைக் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றில் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை பொறுப்பேற்று, அடக்கம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இரணைதீவுக்கு உடல்களை கொண்டு செல்வதற்கான அனைத்து செலவீனங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என அமைச்சரவை உறுதியளித்துள்ளார்.

உடல்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எட்டியதில், அரசாங்கம் தலையீடு செய்யவில்லை எனவும், சுகாதார தரப்பினரே அதற்கான தீர்மானத்தை எட்டியதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.