இலங்கை முஸ்லிம்களுக்காக சவுதி அரேபியா அனுப்பியுள்ள அன்பளிப்பு.

இவ்­வ­ருட ரமழானுக்காக சவூதி அரே­பிய அர­சாங்கம் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு 75 மெற்­ரிக்தொன் பேரீச்சம் பழங்­களை அன்பளிப்பாக வழங்­கி­யுள்­ளது.

இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள ­பே­ரீச்சம் பழங்கள் பள்­ளி­வா­சல்கள் மூலம் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.

கிடைக்­கப்­பெற்­றுள்ள பேரீச்சம்ம் பழங்கள் நாட்டில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­வித்தார்.

கடந்த வருடம் இலங்­கைக்கு நன்­கொ­டை­யாக 150 மெற்­ரிக்தொன் கிடைக்­கப்­பெற்­தா­கவும் தெரி­வித்த பணிப்­பாளர், இம்முறை அதில் அரைவாசியே கிடைத்துள்ளதாகவும் நோன்புக்கு முன்னர் இவற்றை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூறினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.