தேசிய மீலாத் விழா இம்முறை கோலாகலமாக நுவரெலியாவில்.

2021 தேசிய மீலாத் விழா எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முஸ்லீம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

மீலாத் விழா ஏற்பாட்டுக்குழுவின் முதலாவது கூட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நுவரெலியா 

மாவட்ட செயலகத்தில் முஸ்லீம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ. பி. எம். அஸ்ரப் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவர் எஸ். பி. திஸாநாயக்க, நுவரெலியா மாநகர

சபை உறுப்பினர் மஹிந்த தொடம்பே கமகே, முன்னாள் நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் ஹல்ஹாஜ் எம்.எம்.பளீல், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு மேதிக செயலாளர்

திருமதி ரேணுக்கா அமரசிங்க நுவரெலியா மாவட்ட பதில் செயலாளர் சாராத்சந்திர உட்பட நுவரெலியா மாவட்டத்திலுள்ள நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, அம்பகமுவ பிரதேசங்களிலுள்ள அனைத்து முஸ்லீம் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபையினரும் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவர் எஸ். பி. திஸாநாயக்க உரையாற்றுகையில்

"இலங்கையின் தேசிய மீலாத் விழா (2021) இவ்வருடம் நுவரெலியா மாவட்டத்தில் நடத்தவேண்டும் என்ற ஜனாதிபதினதும் பிரதமரினதும் வேண்டுக்கோலுக்கமைய நுவரெலியா மாவட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளோம்.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் கோலாகாலமாக நடத்தப்படும். இந்த விழாவில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர்கள் கலந்துக்கொள்வார்கள். 

இந்த விழா சிறப்பாக நடத்துவதற்கு போதிய இடவசதிகளை கொண்ட இடம் ஒன்றுதெரிவு

செய்யப்பட வேண்டும். இங்கு தற்பொழுது நுவரெலியா, கொத்மலை அபுகஸ்தலாவ, தலவாக்கலை மற்றும் அட்டன் ஆகிய நான்கு நகரங்கள் முன் மொழியப்பட்டுள்ளது. இதில் ஒரு நகரம் தெரிவுசெய்யப்பட்டு அங்கு மீலாத் விழா நடத்தப்படும். 

மீலாத் விழாவை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் மரக்கன்று நாட்டுதல், நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சரித்திரம் புகழ் பெற்ற பள்ளிவாசல் ஒன்றை புனரமைத்தல், வறுமையான 100 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுத்தல், நுவரெலியா மாவட்டத்தில் ஒப்பனை இல்லாத அனைத்து பள்ளிகளும் ஒப்பனைகள் பெற்றுக் கொடுக்கப்படும். 

மேலும் முத்திரை ஒன்றும் வெளியிடப் படும். முஸ்லீம் கலாச்சாரம் தொடர்பான சரித்திரம் புத்தகம் ஒன்றும் 2021 தேசிய மீலாத் விழா சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படும். முஸ்லீம் கலாச்சாரம் தொடர்பான கண்காட்சி ஒன்றும் நடத்தப்படும். அதே போல கலாச்சார நிகழ்வுகளும் நடத்தப்படும். மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு செயற்பாட்டு குழுக்கள் இன்று அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.