கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிட முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளை பிற்போடடுவதற்கு இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், பாடத்திட்டங்கள் முடிக்கப்படாமலிருந்தால் அது தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னர், பரீட்சைகளை குறித்த தினத்தில் நடத்துவதா அல்லது பிற்போடுவதா என்ற இறுதித் தீர்மானத்துக்கு வர முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் முடிவடைந்த க.பொ.த. சாதாரணத் தர பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.